
அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 364 மனுக்கள் வரப்பெற்றன.
அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டு பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தின் சார்பில் 83 பழங்குடியன இளைஞர்களுக்கு தலா ரூ.12000/- வீதம் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் ஓட்டுநர் பயிற்ச்சியுடன் கூடிய ஓட்டுநர் உரிமத்தினையும், வருவாய் துறையின் சார்பில் காரிமங்கலம் வட்டம் பூமாண்டஅள்ளியில் 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாகளையும், உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் நியாயவிலைக் கடை, அரூர் வட்டம் மொரப்பூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் தாசரஅள்ளி நியாயவிலைக் கடை ஆகிய கடைகளில் பணிபுரிந்து வந்த 2 விற்பனையாளராக கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.25.00 இலட்சம் வீதம் 2 நபர்களுக்கு ரூ.50.00 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
மேலும், தாட்கோ அலுவலகத்தின் சார்பில் 9 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.33,500/- மதிப்பீட்டில் கல்வி உத்தவி தொகைக்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82,740/- மதிப்பிலான முடநீக்குசாதனங்களையும், காதொலிக்கருவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி. வி.கே.சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.வி.இராஜசேகரன், பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் திரு.யு.ரமேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.பொ.செண்பகவள்ளி, உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.gif)

