Type Here to Get Search Results !

பொங்கல் பரிசுத் தொகுப்பு 2023 வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிவைத்தார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை சென்னை தீவுத்திடல் அன்னை சத்யா நகரில் இன்று தொடங்கி வைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை பொதுவிநியோகத்திட்ட நியாயவிலைக் கடையில் 1082 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 2023 வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று வழங்கி தொடங்கி வைத்தார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை சென்னை தீவுத்திடல் அன்னை சத்யா நகரில் இன்று தொடங்கி வைத்தார்கள்.


இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை பொதுவிநியோகத்திட்ட நியாயவிலைக் கடையில் 1082 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 2023 வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (09.01.2023) வழங்கி தொடங்கி வைத்தார்கள். 


இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், முன்னிலை வகித்தார். தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 463 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 572 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 42 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1077 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றது.


இதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடர்புடைய நியாய விலைக் கடை மூலமாக தருமபுரி மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4,65,867 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 727 குடும்பங்களுக்கும் இன்று முதல் வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.


தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தில் 74,368 குடும்ப அட்டைதாரர்களுக்கும், நல்லம்பள்ளி வட்டத்தில் 59,242 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பாலக்கோடு வட்டத்தில் 67,297 குடும்ப அட்டைதாரர்களுக்கும், காரிமங்கலம் வட்டத்தில் 52,673 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பென்னாகரம் வட்டத்தில் 73,455 குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரூர் வட்டத்தில் 61,082 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 78,477 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என தருமபுரி மாவட்டத்தில் 4,66,594 அரிசு பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் ஆகியோருக்கு வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு தொடர்புடைய நியாய விலைக் கடை மூலமாக வழங்கப்படுகின்றது.


இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சு.இராமதாஸ், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் திரு. மா.சந்தானம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜே.ஜெயக்குமார், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், தருமபுரி நகராட்சி நகரமன்ற தலைவர் திருமதி. மா.லட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருமதி.ச.மாது, அதியமான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.எம்.மாரியம்மாள், ஒன்றிய துனை செயலாளர் திருமதி.புனிதா பழனிசாமி, மாவட்ட துணை செயலாளர் திரு.ஆறுமுகம், கூட்டுறவு சங்க தலைவர் திரு.அருவி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies