தற்போது சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் மூலமாகவும், கால்நடை மருந்தகங்கள் மூலமாகவும், இதுவரை 1,63,600 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாடுகளுக்கு விரைந்து தடுப்பூசியினை செலுத்தும் விதமாக ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
ஆகவே, இதுவரை தங்களது மாடுகளுக்கு தோல்கழலை நோய் தடுப்பூசி செலுத்தாத கால்நடை வளர்க்கும் விவசாய பெருமக்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி தடுப்பூசியினை செலுத்தி இந்நோயிலிருந்து தங்களது மாடுகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை தருமபுரி(கைபேசி எண் 9445001113) அல்லது உதவி இயக்குநர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு, தருமபுரி (கைபேசி எண் 9443202009) ஆகியோர்களை அணுகி பயன்பெறலாம், என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

.gif)

