Type Here to Get Search Results !

தொப்பூர் முதல் பொம்மிடி வரை செல்லும் சாலையை சீரமைக்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை.


தருமபுரி மாவட்டம் தொப்பூர் ஊராட்சி தொப்பையார் அணை அருகில் தொப்பூர் முதல் பொம்மிடி வரை செல்லும் போக்குவரத்து சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தொப்பையார் அணை தண்ணீர் நிரம்பி இருக்கிறது. அதனால் நீர் பிடிப்பு அதிகமாக இருப்பதால் தார்சாலை ஓரம் உள்ள தடுப்பு சுவர்கள் அலைகளால் அறிக்கப்பட்டு தார்சாலை சேதம் அடைந்தது.

இதனால் இப்பகுதி ஊர் பொதுமக்கள் தினசரி அரசு அலுவலகத்திற்கும் மற்றும் பள்ளி கல்லூரி செல்ல இந்த சாலை தினசரி 1000 மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக கடந்து செல்கின்றன. தொப்பூர் முதல் பொம்மிடி வரை செல்லும் பேருந்துகள் செல்ல சாலையை சீரமைத்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் வலியுறுத்தினார். உடன் பாமக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies