தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புலிக்கல் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிசாமி 260 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் விளையாட்டு சீருடை வழங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை வழங்கி மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி பெரியண்ணன். ஒன்றிய குழுதுணைத் தலைவர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர் சிவகாமி நன்றி தெரிவித்தார்.
.gif)

