தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை 2023 மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (05.01.2023) வெளியிட்டார்கள். பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்த்தாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 57.பாலக்கோடு, 58.பென்னாகரம், 59.தருமபுரி, 60.பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் 61.அரூர் (தனி) ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 2023 இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 09.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு 01.01.2023 அன்றைய தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தோர் மற்றும் விடுபட்டவர்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் பெறப்பட்டு அதன் மீது தணிக்கை மற்றும் விசாரணை செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்தும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் இறந்தோர், குடிபெயர்ந்தோர் இருமுறை பதிவு ஆகிய தகுதியற்ற இனங்களில் உள்ளவர்களை பெயர் நீக்கம் செய்தும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பதிவுகளில் திருத்தம் செய்யக் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை விசாரணை செய்து திருத்தம் செய்யப்பட்டும் இறுதி வாக்காளர் பட்டியலினை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று 05.01.2023 வெளியிடப்பட்டுள்ளது. நாளது தேதியில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை கீழ்கண்டவாறு உள்ளது.

பாலக்கோடு : ஆண் வாக்காளர்கள் 119429, பெண்கள் 116898, மூன்றாம் பாலினத்தவர் 19 மொத்தம் 236346 வாக்காளர்கள்.
பென்னாகரம் : ஆண் வாக்காளர்கள் 126139, பெண்கள் 117883, மூன்றாம் பாலினத்தவர் 10 மொத்தம் 244032 வாக்காளர்கள்.
தருமபுரி : ஆண் வாக்காளர்கள் 130562, பெண்கள் 128011, மூன்றாம் பாலினத்தவர் 98 மொத்தம் 258671 வாக்காளர்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி : ஆண் வாக்காளர்கள் 127555, பெண்கள் 126537, மூன்றாம் பாலினத்தவர் 16 மொத்தம் 254108 வாக்காளர்கள்.
அரூர் (தனி): ஆண் வாக்காளர்கள் 121966, பெண்கள் 121363, மூன்றாம் பாலினத்தவர் 20 மொத்தம் 243349 வாக்காளர்கள்.
மொத்தம் : ஆண் வாக்காளர்கள் 625651, பெண்கள் 610692, மூன்றாம் பாலினத்தவர் 163 மொத்தம் 1236506 வாக்காளர்கள்.
இன்று 05.01.2023 வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 2023 தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம், என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.பழனிதேவி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.வி. இராஜசேகரன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா சுகுமார், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.எச்.சௌகத்அலி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

