தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியாம்பட்டி அருகே கடந்த மாதம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்ற போது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவரது உடலை தருமபுரி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை செய்து பிணவறையில் வைக்கப்பட்டது. இவரது விலாசம் மற்றும் விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இவரை தேடியும் உறவினர்கள் யாரும் தேடி வராத நிலையில் இன்று இவரது உடல் மை தருமபுரி தன்னார்வலர்களின் அமரர் சேவை மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் காரிமங்கலம் காவல் நிலைய காவலர் சந்தோஷ் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சமூக சேவகர் மருத்துவர் முஹம்மத் ஜாபர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் 34 ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.gif)

