இப்படி 50க்கும் மேற்பட்ட தெருக்களில் இடப்பட்ட கோலங்களை சிறப்பு உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு சிறந்த கோலங்களை தேர்வு செய்து 18 வார்டுகளில் முதல் பரிசாக 5000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் 3 நபர்களுக்கும், இரண்டாம் பரிசாக 4000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் 3 நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக 3000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் 3 நபர்களுக்கும், ஆறுதல் பரிசாக 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 1000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வழங்க வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கவுன்சிலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, இதில் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள், குடும்ப தலைவிகள், துப்புரவு பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் முரளி மற்றும் பாலக்கோடு டிஎஸ்பி சிந்து ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களான மிக்ஸி, கேஸ் ஸ்டவ், மாவு பிணையும் இயந்திரம், குக்கர் மற்றும் பல வீட்டு உபயோக பொருட்களை பரிசாக அள்ளிச்சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட பொருளாளர் முருகன், பாலக்கோடு மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, இன்ஸ்பெக்டர் தவமணி, கவுன்சிலர் முத்துசாமி, பாலக்கோடு பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா, கவுன்சிலர்கள் சாதிக் பாஷா, ஹசினா, பத்தேகான், ருஹித், லட்சுமி, தீபா, ஆயிஷா, சரவணன், ஜெயந்தி, பிரேமா, சிவசங்கரி, நாகலட்சுமி, மோகன் மற்றும் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் இதாயத்துல்லா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி மற்றும் டிஎஸ்பி சிந்து ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதேபோல், பாலக்கோடு காவல் நிலையத்திலும் துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் எழுத்தர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கலந்து கொண்டு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்.
.gif)

