தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது. தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் உபயோகம், பான்மசாலா குட்கா விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஐஸ் தயாரிக்கும் கம்பெனிகளும் ஆய்வு செய்யப்பட்டு உரிமம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் அசைவ உணவு தயாரிக்கும் அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் அயோடின் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் திருமதி.ஏ. பானுசுஜாதா, தருமபுரி காவல் ஆய்வாளர், துணை இயக்குநர் சுகாதாரபணிகள், மாவட்ட வழங்கல் அலுவலர், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர், அரசு கலைக்கல்லூரி ஊட்டச்சத்து பேராசிரியர் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகர வர்த்தகர் சங்கம், நுகர்வோர் சங்கத்தினர், காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.மு.நந்தகோபால் மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.ஊ.கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.