Type Here to Get Search Results !

பிக்கிலிகாப்புக் காட்டில் வன பகுதியை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்த இருவர் கைது .


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கிலிகாப்புக் காட்டு பகுதியில் கொட்டகை அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்க்கு சென்ற வனத்துறையினர் மலையூர் பகுதியை சேர்ந்த சஞ்சீவன் (வயது45), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (வயது37) ஆகியோர் அனுமதியின்றி யானைகள் செல்லும் வழித்தடத்தில் கொட்டகை அமைத்தும், காட்டுமரங்களை வெட்டி, ஆட்டுபட்டி அமைத்து, நாய்களை வைத்து வனவிலங்குகளை விரட்டி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த வனச்சரகர் நடராஜ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies