Type Here to Get Search Results !

தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்கள் ஏலம்.


தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோராத 29 வாகனங்கள் நேற்று ஏலம் விடப்பட்டது. ஏலம் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. 

சேலம் சரக துணை போக்குவரத்து ஆணையர் கே.எம்.பிரபாகரன்  முன்னிலையில்,  தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர், மோட்டார் வாகன பராமரிப்புத்துறை பொறியாளர் பழனிவேல், தருமபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். 


மொத்தம் 29 வாகனங்கள் ஏலம் விடப்பட்டதில்  ஏலத்தொகையாக   ரூ.3,66,000 , ஜிஎஸ்டி  தொகை ரூ.65,880  மொத்தம் ரூபாய் 4,31,880 அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies