தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் மண் தரைக்கு பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிக்கு 4.26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலக்கோடு 2- வது வார்டு கவுன்சிலர் விமலன் தலைமையில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்,
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன், மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் கவிதாசரவணன், ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், நகர செயலாளர் ராஜா, குருமணிநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தண்டாயுதம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பிணர்கள் கேசவராஜ், விமல்ராஜ் , மற்றும் பெற்றோர்கள் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையாசிரியர் அருள்நாதன் நன்றி தெரிவித்தார்.
.gif)

