தமிழக சட்டப்பேரவை மரபுகளை மீறியதாக ஆளுநர் ஆர்.என். ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தும் மாநிலம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோசலிஸ்ட் அமைப்பினர் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.அம்மாசி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இ.பி.புகழேந்தி கண்டன உரையாற்றினார். மாநில குழு உறுப்பினர் டி.ஆர்.மாதேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தா.மு.சண்முகம், உ.கோவிந்தசாமி, ஆர்.வேடியப்பன், பி.காவேரி, ஆர்.பாண்டுரங்கன் தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சட்டப்பேரவை மரபுகளை மீறிய ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

