Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இரத்ததானம், கட்டுரை, பேச்சு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது. 


இலக்கியம்பட்டி கடல்பறா இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் 10க்கும் மேற்ப்பட்டோர் தருமபுரி அரசு தலைமை மருத்துவ மனை இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கினர். இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் லாவண்யா நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.


இரத்ததானத்தை தொடர்ந்து கிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அலுவலர் உலகநாதன், இலக்கியம்பட்டி ஊராட்சி கவுன்சிலர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலக்கியம் பட்டி கடல்பறா இளைஞர் நற்பணி மன்றத்தனருடன் இணைந்து ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. நிறைவாக நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies