வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி சரோஜா அவர்கள் தலைமையில் ஈட்டியம்பட்டி கிராமத்தில் புதிய ரக பயிர்கள் சாகுபடி செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேளாண்மை உதவி இயக்குனர் அவர்கள் கூறும் பொழுது விவசாயிகள் பாரம்பரிய ரகங்களான கருப்பு கவுனி போன்ற நெல் ரகங்களை பயிர் செய்து தினசரி உணவாக உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன் கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு கேன்சர் நோய் கட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் வருவது குறையும் எனவே விவசாயிகள் கருப்பு கவுனி பாரம்பரிய நெல் வகைகளை பயிர் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார், இயற்கை விவசாயி, தயாநிதி உட்பட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
