தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் மகளிருக்கான மூன்று மாத கால திறன் மேம்பாட்டு அடிப்படை தையல் கலை மற்றும் எம்ராய்டரிங் பயிற்சி மொரப்பூர் விப்ரோ தொண்டு நிறுவன வளாகத்தில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சம்பத் குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தொப்பம்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வம், நவலை ஊராட்சி கவுன்சிலர் சசிகுமார், தொப்பம்பட்டி ஊராட்சி சார்பில் அவர் கணவர் ராஜ், போளையம்பள்ளி ஊராட்சி சார்பில் அவர் கணவர் மாயகண்ணன், விப்ரோ தொண்டு நிறுவன இயக்குநர் வெங்கடேசன், தையல் பயிற்சி ஆசிரியை எழிலரசி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பயிற்சி திறப்பு விழா நிகழ்ச்சியில் 30க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார் நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் நன்றி கூறினார்.