வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் நாச்சினாம்பட்டி கிராமத்தில் நானோ யூரியா செயல் விளக்கம் வேளாண்மை உதவி அலுவலர் திரு ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு நானோ யூரியா பயிர்களுக்கு தெளிக்கும் பொழுது பயிர்கள் 80 சதவீதம் முழுமையாக எடுத்துக் கொள்கிறது ஆனால் குருணை வடிவில் உள்ள யூரியாவை பயன்படுத்தினால் 30 முதல் 50 சதவீதம் மட்டுமே பயிர்கள் எடுத்துக் கொள்கிறது என்று கூறினார்கள் மேலும் நனோ யூரியாவை பயன்படுத்தும் பொழுது மண்புழுக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் கூறினார்கள்.
மேலும் விவசாயிகள் நானோ யூரியா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 முதல் 4 மில்லி வரை கரைசல் தயார் செய்து உபயோகிக்கலாம் என்றும் கூறினார்கள் எனவே விவசாயிகள் நேனோ யூரியாவை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில்குமார் மற்றும் அட்மா திட்ட வட்டார உழவர் ஆலோசனை குழு தலைவர் திரு சுப்பிரமணி மற்றும் வட்டார உழவர் ஆலோசனை குழு உறுப்பினர் திரு முருகன் உட்பட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.