பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் அவர்கள் திறந்து வைத்தார். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக பதவியேற்ற நாள் முதல் பல்வேறு கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பழனியப்பன் அவர்கள் தனது மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் ஒன்றிய அலுவலகம் திறக்க வலியுறுத்தி வருகிறார்.இந் நிலையில் நேற்று முன்தினம் பாலக்கோடு மத்திய ஒன்றியத்திற்கு உண்டான கட்சி அலுவலகத்தை பாலக்கோடு டவுனில் திறந்து வைத்து. கட்சியினரிடையே மனுக்களை பெற்றார்.
மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் அவர்கள் வரவேற்புரை ஆற்றிய நிலையில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மாவட்ட அவை தலைவர் மனோகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் மணி, இராஜகுமாரி, பொருளாளர் முருகன் ,தலைமைச் செயற்குழு உறுப்பினர் மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கோபால் காரிமங்கலம் கிருஷ்ணன்,அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆப்பிள் பாபு (எ)முத்துஜா, குட்டி மோகன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் முருகன், பேரூராட்சி தலைவர்கள் முரளி, வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் அவை தலைவர் இராஜாமணி, மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இரவி, மாவட்டச் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் செழியன், தொழில் நுட்ப அணி ஆனந்தன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் அழகு சிங்கம், முத்துசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன்,மதிவாணன், இராஜபார்ட் ரங்கதுரை, மோகன், முருகன், தருமன், குமரன், விவசாய அணி குமார், அற்புதம், ஆறுமுகம், பொருளாளர் குமார், ஒன்றிய இளைஞரணி குமார், ஹரிபிரசாந்த், வேலு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.