தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஈச்சம்பட்டி கிராமத்தில் குடியிருந்து வரும் சீனிவாசன் மகன் சிவக்குமார் என்பவர் தருமபுரி சீனிவாச தெரு, RK காம்ப்ளக்சில் தனலட்சுமி தங்க நிறுவனம் என்ற நிறுவனம் மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்கள் நிறைய பேரிடம் பணத்தை வசூல் செய்து திருப்பி தராமால் ஏமாற்றி பண மோசடி செய்துள்ளதாக கொடுத்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் கு.எண். 1411/2020 சட்டப்பிரிவு 406, 420, 506(1) இ.த.ச- படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கானது தற்போது தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சிவக்குமாரிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் உடனடியாக தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்கள் வசம் உள்ள அசல் ஆவணங்கள், அசல் சீட்டு, மற்றும் அட்டை ஆகியவைகளுடன் எழுத்து மூலமாக கீழ்கண்ட அலுவலக முகவரியில் புகார் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அலுவலக முகவரி:- காவல் ஆய்வாளர். பொருளாதார குற்றப்பிரிவு, க.எண்.2/127, வள்ளுவர் நகர், ஒட்டப்பட்டி, தருமபுரி - 636705, என பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
