தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி மற்றும் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டப்பட்டி நியாய விலைக்கடைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப, அவர்கள் இன்று (29.12.2022) நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டியில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையினையும், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டப்பட்டியில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்பட்டு வரும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பரிசோதித்து, அதன் தரம் குறித்து கேட்டறிந்தார்கள்.

மேலும், இந்த நியாய விலைக்கடைகளில் இருந்த அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் மூட்டைகளின் எடை அளவு சரியாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து. குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தரமாகவும் தங்கு தடையின்றியும் வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப, அவர்கள் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சு.இராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.