நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வரும் தொழில்நுட்பம், இணையதளம், கைபேசி போன்றவைகளால் எந்த அளவுக்கு நேர்மறை பயன்பாடுகள் உள்ளதோ அதே அளவுக்கு எதிர்மறை பயன்பாடுகளும் உள்ளது. கல்வி சிந்தனையில் வளர்ந்து வரும் சிறுவர்கள்,மாணவர்கள் இணையதள மோசடி, இணையதள விளையாட்டுக்கள், போலி வங்கி மோசடிகள், ஆன்லைன் விளையாட்டுக்கள் போன்ற இணையதள வசதியால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

தற்போதுள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இந்த இணையதள குற்றங்களை பற்றி மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஆசிரியர்கள், காவல்துறையினர் எடுத்துரைக்கின்றனர்.
ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலம் இணையதள குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர்கள் திரு.பழனியப்பன், உதவி காவல் ஆய்வாளர் ரகுவரன் மற்றும் திருமதி.செல்வி கலந்து கொண்டு மாணவர்களிடம் இணைய தள குற்றங்கள் பற்றிய கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கை கல்லூரி தாளாளர் திரு.கோவிந்த் ஐயா அவர்கள் தலைமையில், கல்லூரி முதல்வர் திரு.எழிலன் ஐயா அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. கல்லூரி நிர்வாக அலுவலர் திரு.கணேஷ், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.