பாலக்கோடு சிவன் ஆலயங்களில் பெளர்னமி மற்றும் சந்திர கிரகனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கோட்டை தெருவில் உள்ள அருள்மிகு பரமேஸ்வரன் ஆலயத்திலும், மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள பால்வண்ணநாதர் சிவன் ஆலயத்திலும் ஐப்பசி மாத பெளர்னமி தினத்தையொட்டியும், சந்திர கிரகணத்தை முன்னிட்டும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் சிவலிங்கத்திற்க்கு அலங்காரிக்கப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

திராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.