தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகத அள்ளிகிராமத்தை சேர்ந்த பவித்ரா முனிரத்தினம் தம்பதியரின் 18 மாத இரட்டை பெண் குழந்தை நேகாஸ்ரீ, கோபிஷா, இதில் நேகாஸ்ரீ என்ற குழந்தை நேற்று காலை வீட்டினருகே விளையாடி கொண்டிருந்த போது அப்பகுதியில் மினி சரக்கு வாகனத்தில் வெங்காயம் வியாபரம் செய்து கொண்டிருந்த வாகனத்தின் கீழே குழந்தை நின்று கொண்டிருந்தது, இதை கவனிக்காத ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதால் குழந்தையின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குழந்தை அலறியது, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்., ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று மாலை உயிரிழந்தது. பவித்ராவின் கனவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.
இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.