இதனையொட்டி கடந்த 4ம் தேதி வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது, அதனை தொடர்ந்து புது விக்ரஹம் கரிகோல ஊர்வலம், ஆச்சார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, யஜமானர் சங்கல்பம், புண்யாகவாசனம், உள்ளிட்ட யாகங்கள் வளர்க்கப்பட்டு அக்னி ஆராதனம் செய்யப்பட்டு, கும்ப பிரதிஷ்டை நடைபெற்றது.
இதனையடுத்து நூதன விக்கிரஹம் பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாற்றுதலும், திருமஞ்சனம்,அபிஷேகம்,பூர்ணா ஹதி, யாகசாலை ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளன நேற்று திங்கட்கிழமை காலை யாகசாலையிலிருந்து கும்பத்தை தலை மீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து விநாயகர் மற்றும் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த விழாவையொட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டை ஊர் பொது மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.