தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி மொத்தம் 18 வார்டுகள் உள்ளன இங்கு உள்ள ஒன்பதாவது வார்டில் பத்து வருடங்களுக்கு மேலாக மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகித்து வந்த ஆழ்துளை கிணறு மற்றும் மினிடேங்க் உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றிலிருந்து மினிடேங்குக்கு குடிநீர் ஏற்றும் மோட்டார் திருடு போன நிலையில் ஒன்பதாவது வார்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா அதனைக் கண்டு கொள்ளாமல் பலமுறை ஒரு தலை பட்சமாக பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்று தேமுதிக நகரச் செயலாளர் குமார் ஆவார். பின்னர் அவரும் இந்த ஆழ்துளை கிணறு மற்றும் மினிடேங்க்கை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் விநியோகிக்க பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவே இதனைக் கண்டித்து இன்று பெண்ணாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் உள்ள மினிடேங்க்கு வார்டு கவுன்சிலர் குமார் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து நூதன முறையில் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் தகவல் அறிந்து வந்த வார்டு பெண்கள் சாலையிலேயே கவுன்சிலர் குமாரை முற்றுகையிட்டு குடி தண்ணீர் பின் கம்பம் சாலை வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கேள்வி எழுப்பிய பெண்களிடமிருந்து நைசாக நழுவிச் சென்ற கவுன்சிலர் குமார் ஓரமாக நின்றார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி இதுபோன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு கருப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு ஒன்பதாவது வார்டு பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை அவர்கள் வலியுறுத்திய எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்பதே வார்டு பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.