தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் கெண்டையணள்ளி ஊராட்சியில் உள்ள K. புதூர் மற்றும் பழையூர் மற்றும் வெள்ளமண்காடு ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கபட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கெண்டையணள்ளி ஊராட்சி கிராம கல்விக்குழு தலைவர் தேவராஜ் மற்றும் தலைமை ஆசிரியர் மாதப்பன் மற்றும் ஆசிரியர்கள் முனிகுமார், ராஜ்குமார், சாமுவேல், ஜெய்சிங் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.