தர்மபுரி வருவாய் மாவட்ட அளவிலான 14- வயது, 17- வயது, 19- வயதிகளுக்கு உட்பட்ட ஜீனீயர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவு மாணவர்களுக்கான ஹாக்கி விளையாட்டு போட்டிகள் தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி,பென்னாகரம், பாலக்கோடு ஆகிய சரகங்களில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இப்போட்டிகள் அனைத்திலும் பாலக்கோடு ஹாக்கி அணி அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடி முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதே போன்று தடகள போட்டிகளிலும் ரிஷிகேஷ் என்ற மாணவர் உயரம் தாண்டும் போட்டியில் முதல் இடமும் கோகுலநாத் என்ற மாணவர் 600 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று மாநில அளவிலான தடகள போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் சூப்பர் சீனியர் கூடைப்பந்து போட்டிகளிலும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகள் ஜீனீயர் மாணவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்திலும், சீனியர் மாணவர்களுக்கு தர்மபுரி மாவட்டத்திலும் மற்றும் சூப்பர் சீனியர் மாணவர்களுக்கு நாமக்கல் மாவட்டத்திலும் டிசம்பர் மாதம் திருவண்ணாமலை மாவட்டத்திலும் தடகள போட்டி நடைபெற உள்ளது.
சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களையும், இதற்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ரங்கநாதன் அறிவழகன், மற்றும் இளையராஜா ஆகியோரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் இராஜகோபால், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் இலட்சுமணன், உதவி தலைமை ஆசிரியர்கள் சுதா மற்றும் பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அரிமா ஜீவா கிருஷ்ணன், பொறுப்பாளர்களும் மற்றும் இருபால் ஆசிரியர் ஆசிரியைகளும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.