
இந்நிகழ்ச்சிக்கு, பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி, காரிமங்கலம் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், து.தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஜக்கசமுத்திரம் ஊராட்சி வெள்ளிசந்தை குடியிருப்பு பகுதியில் 8 இலட்சம் ரூபாய் மதீப்பிட்டில் 170 மீட்டர் தூரம் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் 55 குடியிருப்புகளுக்கு புதிய குடிநீர் வழங்க 6.54 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பைப் லைன் அமைக்கும் பணிகளையும், மாக்கானூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 4 இலட்சம் ரூபாய் மதீப்பீட்டில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட 3 புதிய சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணிகளையும், மற்றும் கல்கூட அள்ளி அண்னா நகரில் மத்திய ஜல்சக்தி திட்டத்தில் 335 வீடுகளுக்கு 11 இலட்சம் ரூபாய் மதீப்பிட்டில் புதிதாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட 30 இலட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் பூமி பூஜை, செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் துணை சேர்மேன் ஆனந்தன், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் பொன்னுவேல், ஜக்க சமுத்திரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜா, ஊராட்சி செயலாளர் சரவணன்மர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.