பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துனைத் தலைவர் பி.கே.சிவா முன்னிலை வகித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால், மின்சாரம், சொத்து வரி உயர்வை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
கொரோனா பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வு மக்களை மேலும் சிரமத்திற்கே ஆளாக்கி உள்ளது.
எனவே உடனடியாக சொத்து வரி, பால் விலை, மின்கட்டண விலை உயர்வை ரத்து செய் அல்லது பதவியை ராஜினாமா செய் என ஆக்ரோஷமாக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், முன்னாள் மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் சண்முகம், ஒன்றிய பொது செயலாளர்கள் கிருஷ்ணன், முருகன், முன்னாள் மாவட்ட விவசாய அணி தலைவர் முனுசாமி, கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.