பென்னாகரத்த அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை உத்தரவின்படி வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமை வகித்தார். வானவில் மன்றம் தொடங்கப்படுவதின் நோக்கம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதவியல் சார்ந்த செயல்பாடுகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்று அறிவியல் ஆய்வு மனப்பான்மையையும், அறிவியல் கண்ணோட்டத்தையும் மாணவர்களுடைய உருவாக்குவதற்கு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டெம் (STEM) Science Technology Engineering mathematics என்ற பெயரில் பள்ளிகள் தோறும் STEM அம்பாசிடர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கிறது. தொடக்க விழா நிகழ்ச்சியில் எளிய அறிவியல் சோதனைகள் செய்துக்காட்டப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, திலகவதி உட்பட மாணவர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்
