தற்போது தருமபுரி மாவட்ட வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் SSC- CGL- 2022 தேர்விற்கான காலிப்பணியிடங் களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளத்தில்(Online) விண்ணப்பிப்பத்திற்கான கடைசி நாள் 08.10.2022 இதற்கான இலவச பயிற்சி வகுப்பு 28.09.2022 முதல் நடை பெற்று வருகிறது.
இத்தேர்விற்கு கணிணி வழியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/3xDGUxf என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்கவும் மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். SSC - CGL - 2022 போட்டித் தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.


