பாப்பாரப்பட்டி அடுத்த சஞ்சீவராயன் மலையில் உள்ள சஞ்சீவராயன் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மலைக்கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ரதத்தில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் கட்டளைதாரர்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
அதேபோல் சிட்லகாரம்பட்டி நரசிம்ம சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நரசிம்ம சுவாமிக்கு மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் வளாகத்தை சுற்றி சுவாமி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. மொட்டை அடித்தல் காது குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். விழாவில் அன்னதானம் செய்யப்பட்டது. பென்னாகரம்,பாப்பாரப்பட்டி, தருமபுரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


