இலக்கியம்பட்டி ஊராட்சி தலைவர் திருமதி சுதா ரமேஷ் தலைமை வகித்தார் துணை தலைவர் திருமதி வித்யா வெங்கடேசன், கிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை இந்தியா திட்ட பணி முகாமினை மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி இ ஆ ப அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் ஏரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு விழாவினை சிறப்பித்தார்.சிறப்பு விருந்தினராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ் பி வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
200க்கும் மேலான அரசு கலைக்கல்லூரி மற்றும் கிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் தூய்மை பணி மேற்கொண்டனர்.
தருமபுரி வட்டாட்சியர் திரு.ராஜராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், கணேசன் இலக்கியம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி செந்தில், இளங்கோ, அரசு பள்ளிகளின் விடுதிகள் இயக்குநர் பாலகிருஷ்ணன், கிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் விரிவுரையாளர்கள் ரஞ்சிதா, மகேஷ்வரி, காமதேனு அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் குப்புசாமி, முருகன், சந்திரசேகர் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.