பென்னாகரம் அருகே கொப்பலூர் கிராமத்தில் புதிய கழிவு நீர் கால்வாய் அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட கவுன்சிலரும், ஏரியூர் திமுக ஒன்றிய கழக செயலாளர். என் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கலப்பம்பாடி ஊராட்சி கொப்பலூர் கிராமத்தில் 15 ஆவது நிதி குழு மானிய திட்டம், மாவட்ட ஊராட்சிக் குழு நிதியில் ரூ. 8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினை மாவட்ட கவுன்சிலர், ஏரியூர் ஒன்றிய கழக செயலாளர் என்.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சதீஷ் ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திக் வையாபுரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகா இளையராஜா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எல்ஜிகுமார், பென்னாகரம் போக்குவரத்து பணிவனை தொமுச செயலாளர் வெற்றிச்செல்வன் நிர்வாகிகள் பைரப்பன், திராவிட அரசு ஆசிரியர் சங்க நிர்வாகி பெருமாள், வஜ்ரவேல், ரமேஷ், மாதேஷ், ராஜிவேல், கோவிந்தராஜ் கார்த்திக், ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


