தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜெர்தலாவ் ஏரி கரையில் 1000 பனை விதைகள் நடவு செய்த மக்கள் உரிமை சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு சங்கத்தினர்.
பாலக்கோடு சுற்றியுள்ள ஜெர்தலாவ் ஏரி, புங்கன் குட்டை ஏரி, தாமரை ஏரி உள்ளிட்ட ஏரிகளின் கரைகளை பலப்படுத்தும் விதமாகவும், நீர் மேலாண்மையை வலுப்படுத்த உதவும் வகையில் ஏரி கரைகளில் பனை விதைகளை நடவு செய்யும் பணியில் தர்மபுரி மாவட்ட மக்கள் உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழல், பசுமை பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் தேவன் தலைமையில் ஜெர்தலாவ் ஏரியில் பனை விதைகள் நடும் பணி நடைப்பெற்றது.
இதில் ஜெர்தலாவ் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் கலந்து கொண்டு பனை விதையை விதைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவாட்ட செயலாளர் இராஜேந்திரன், நகர தலைவர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் சரவணன், மண்டல துனைத் தலைவர் புளி கோவிந்தராஜ், பாஜக மாவட்ட நலத்திட்ட பிரிவு தலைவர் சிவா, நிர்வாகிகள் மாது, மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.


