தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து சம்மந்தமாக போஷன் மா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் கர்ப்பிணிகளுக்கு ஆயிரம் நாட்கள் முக்கியத்துவம் குறித்து மற்றும் 0-6 வருட குழந்தைளின் எடை குறைவு குள்ளத்தன்மை, உடல் மெலிவு, கடுமையான எடை குறைபாடு, இரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டை குறைத்தல் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது மேலும் காய்கறிகளில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து கும்மியடித்து கோலமிட்டு பேரணி செல்லப்பட்டது.
இதில் ஜெயந்தி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், ஆனந்த செல்வம் வட்டார திட்ட உதவியாளர், ஆனந்தன் வட்டார ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர்கள் சந்திரா, மலர்விழி, ஜெயா, தமிழ்ச்செல்வி மற்றும் கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் 50 கலந்து கொண்டனர்.
