தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜி. கே.மணி அவர்கள் இன்று விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார்.
மேலும் இதில் தலைமை ஆசிரியர் சம்பத்குமார், துணை தலைமை ஆசிரியர் ஸ்ரீமதி, புலிக்கரை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சந்திரா நேரு, பாலக்கோடு சேர்மன் சேட், பாமக மாவட்ட தலைவர் சம்பத், பாமக மாவட்ட தெற்கு ஒன்றிய அமைப்பு செயலாளருமான ரமேஷ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர், இவர்களுடன் பொதுமக்கள், ஆசிரியர், மற்றும் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.
