தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு திமுக பேரூர் கழக சார்பில் பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புக்கள் வழங்கி கொண்டாடப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகன, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, நகர அவைத்தலைவர் அமானுல்லா, முன்னாள் நகர அவைத்தலைவர் ராஜி, முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் மோகன், அழகு சிங்கம், இருசன், வார்டு பிரதிநிதிகள் சாதிக், ரோஹித், குமார், சரவணன் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி நகர ஒருங்கிணைப்பாளர் துரை சுரேஷ்குமார், நிர்வாகிகள் பெரியசாமி, மன்சூர், ஸ்ரீதர், மாரியப்பன், கேட் சிவா, அருள், மாஸ்டர் கணேசன், ராஜசேகர், ஞானம், தளபதி சண்முகம், ரகு, மாதேஷ், ஆறுமுகம், அரவிந்த் உட்பட ஏராளனமான பேரூர் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
