தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர பாஜக சார்பில் நகர தலைவர் வேலு தலைமையில் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
முன்னதா பாஜக கட்சி கொடி ஏற்றி ஊழல் மற்றும் தீவிரவாதத்தை வேரறுப்போம் என உறுதி மொழி ஏற்றனர். அதனை தொடர்ந்து கட்சி தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் முருகன், மாவட்ட மகளிர் அணி தலைவி சங்கீதா, மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ் நகர செயலாளர் சத்யவேலு, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கனேஷ்குமார் மற்றும் கட்சி தொண்டர் கலந்து கொண்டனர்.
