தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் இலக்கிய மன்றத்தின் சார்பாக ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இத்துறையில் பயிலக்கூடிய கேரளத்தைச் சார்ந்த மாணவிகள் பிற மாணவிகளுடன் இணைந்து ஓணம் பண்டிகை பிரதிபலிக்கும் பூக்கோலம் ஆகியவற்றை வரைந்தும் இப்பண்டிகையை பறைசாற்றும் ஏனைய பிற நிகழ்வுகளையும் வெகு சிறப்பாக நடத்தினர்.
இந்நிகழ்விற்கு ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார்: மேலும் ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் . சி கோவிந்தராஜ், துறையின் பிற பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பங்கு பெற்று நிகழ்வை சிறப்பாக நடத்தினர். இறுதியாக முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி கோகிலவாணி நன்றி உரையாற்றினார்.
