வாகனத்தினை ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 21:09.2022 மற்றும் 22.09.2022 ஆகிய இரண்டு தினங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள [ (TVS SUZUKI) TN 29G 0040 மற்றும் TN 29G 0041 ] எண்ணுள்ள இருசக்கர வாகனங்களை நேரில் பார்வையிடலாம்.
மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 26.09.2022 அன்று மாலை 3.00 மணிக்குள் தங்களது ஆதார் அடையாள அட்டையுடன் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.500/- முன்பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அதிகபட்ச ஏலத்தொகை கோருபவர்கள் ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவைவரி கட்டணமாக 18 சதவீதம் சேர்த்து முழுதொகையையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். ஏலத்தில் கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனகேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி சேலம் மெயின்ரோடு சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மாவட்ட தொழில்மைய அலுவலத்தை தொடர்பு கொள்ளவும்.
