தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் தலைமையாசிரியர் செ. மல்லிகா தலைமை தாங்கினார்.
பேரணியில் உதவி தலைமையாசிரியர் சி. நாகேந்திரன், ஆசிரியர்கள், காவல்துறை ஆய்வாளர்கள், மாணவிகள் கலந்துகொண்டு பள்ளியில் இருந்து பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இதில் ஓசோன் பாதிப்பு, பாதுகாத்தல் குறித்து முழக்கமிட்டனர். தவிர்ப்போம் தவிர்ப்போம் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்" "எரிக்காதே எரிக்காதே பிளாஸ்டிக்கை எரிக்காதே" "பாதுகாப்போம் பாதுகாப்போம் ஓசனை பாதுகாப்போம் "என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.