Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கூடிய கடன்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளவர்கள், கறவை மாடுகள் வாங்க திட்டத்தொகை ரூ.1.50 இலட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.45,000/- வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பயனாளிகள் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ஆரசாணை எண்.64, நாள்: 11.08.2022 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (சிஉதி) துறையில் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பில் 450 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 50 பழங்குடியினருக்கும், ஆக மொத்தம் 500 நபர்களுக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 7.50 கோடி மதிப்பீட்டில் மானியம் ரூ.2.25 கோடி வங்கி கடன் 487.50 கோடி என முடிவு செய்யப்பட்டு கறவை மாடுகள் வாங்க ஒதுக்கீடு செய்து அரசாணை வரப்பெற்றுள்ளது, அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கு 8 ஆதிதிராவிடர்களுக்கு மானியம் ரூ.45,000/- வீதம் 3.60 இலட்சம் ஆகவும், பழங்குடியினர் 2 பேருக்கு தலா 45,000/- வீதம் 0.90 ஆயிரம் இலக்கு நிர்ணயித்து அரசாணை வரப்பெற்றுள்ளது.

இதற்கான நிபந்தனைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும், வயது 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்கு இருக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்படும் திட்டத் தொகை ரூ. 1,50,000/- இலட்சத்தில் 30% சதவீத மானியம் அதாவது ரூ.45,000/- மானியமாக விடுவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவரிடம் உரிய காப்பீடு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

இத்திட்டத்தில் பயன் பெற ஆதிதிராவிடர் பயனாளிகள் http://application.tahdco.com என்ற http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினர் இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884