இத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 17.09.2022 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் உள்ள GDP அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், வங்கி கடனுதவி, அரசின் மானியத் திட்டங்கள் பற்றிய முழுமையான ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம். பள்ளி மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வரும்பட்சத்தில் இணையதளம் வாயிலாக கடன் விண்ணப்பம் பதிவேற்றப்பட்டு உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் விவரங்கள் அறிய 04342-230892,89255 33941 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
