தர்மபுரி மாவட்டம் அரூர் வீரப்ப நாயக்கம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட பாப்பநாயக்கன் வலசை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா, இந்த விழா கடந்த ஏழாம் தேதி கணபதி பூஜை உடன் தொடங்கியது. இன்று அதிகாலை யாகசாலையில் அக்னிகுண்டம் பழக்கப்பட்டு யாகங்கள் நடந்தேறியது.
அதனைத் தொடர்ந்து கலச ஆராதனை கிரக ஹோமம் பஞ்ச சுத்த ஹோமம் துர்க்க சகஸ்ரநாமம் மகா சாந்தி ஓம் புண்யா ஆசனம் கோ பூஜை மூலவர் அபிஷேக நடைபெற்றது இதை அடுத்து சாலையில் இருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடங்கள், மாவிலக்கு ஏந்தி ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெற்றது.
அழகு முத்துமாரியம்மன்க்குபல்வேறு வாசனை திரவியங்கள் பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவிளக்கு கூழ் படைத்து விட்டு பக்தர்கள் சென்றனர், இதில் 1000,க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்
