Type Here to Get Search Results !

மாவட்ட அளவிலான 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு 2021-22 முதற்கட்டம்-1 பயிற்சி வகுப்பு.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தலைமையில் மாவட்ட புள்ளிஇயல் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புள்ளிஇயல் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு 2021-22 முதற்கட்டம்-1 பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப, அவர்கள் தலைமையில் இன்று (02.09.2022) நடைபெற்றது.

இந்த வேளாண்மை கணக்கெடுப்பானது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அளவில் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை இந்த கணக்கெடுப்பின் ஒருங்கிணைப்பு அமைப்பாக செயல்பட்டு வருகின்றது.

வேளாண்மை கணக்கெடுப்பு பணி எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மென்பொருள் வழியாக பயிற்சி இந்த கணக்கெடுப்பினை மேற்பார்வை மேற்கொள்ளும் வட்டாட்சியர்களுக்கு அளிக்கப்பட்டது. முதன்முறையாக இந்த கணக்கெடுப்பானது செயலிவழியாக கிராம நிர்வாக அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகின்றது.

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மாவட்ட வேளாண்மை கணக்கெடுப்பு அலுவலராகவும் மற்றும் வட்ட அளவில் அந்தந்த வட்டாட்சியர்கள் வட்ட வேளாண்மை கணக்கெடுப்பு அலுவலராகவும், ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கான கணக்கெடுப்பு அலுவலர்களாக அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களும் நியமிக்கப்பட்டு இந்தாண்டு 2022 செப்டம்பர் மாதம் தொடங்கி 2022 டிசம்பர் மாதத்திற்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேளாண்மை கணக்கெடுப்பிலிருந்து தமிழ்நாட்டில் எவ்வளவு நபர்கள் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். குத்தகை வழியாக எவ்வளவு நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பரப்பளவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் குறு, சிறு. நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் வாரியாகவும், எவ்வளவு விவசாயிகள் உள்ளனர். என்பதை அதனடிப்படையில் வரும் ஆண்டுகளில் வேளாண்மை சமூக அடிப்படையிலும் கணக்கெடுத்து கொள்கைகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்பயிற்சி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப, அருகில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன், புள்ளிஇயல் துறை இயக்குநர் திருராஜேக்கப் வேதகுமார் உட்பட துறை அலுவலர்கள், வருவாய் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies