Type Here to Get Search Results !

இரயில்களில் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி கேபின் அமைக்கவும் - மரு.செந்தில்குமார் MP கோரிக்கை.

ரயில்களில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட தனி கேபின் அமைக்க வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை திமுக எம்.பி டி.என்.வி.செந்தில்குமார் கடந்த 05ஆம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இது தொடர்பாக மரு.செந்தில்குமார் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது ‘நாடு முழுவதிலும் ஓடும் ரயில்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட தாய்மார்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதற்காக ரயில் பெட்டிகளில் தனியாக ஓர் இடம் ஒதுக்கினால் பாராட்டுக்குரியதாக இருக்கும்.

அதேபோல், குழந்தைகளுக்கானக் கழிவறை வசதியும் ரயில்களில் சிக்கலாக உள்ளது. கடந்த 1853-ம் ஆண்டு முதல் இந்தியாவில் ரயில்கள் ஓடத் தொடங்கினாலும், அதில் கழிவறைகள் 1909-ம் ஆண்டில்தான் அமைக்கப்பட்டன.

எனவே, தாய்மார்களுக்கான இந்த இரண்டு பிரச்சினைகளையும் அரசு பரிசீலித்து உரிய வசதிகளை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies