Type Here to Get Search Results !

ஆன்லைன் ரம்மியை தடை விதிப்பதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துபவர் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டுமே - எடப்பாடி பழனிசாமி.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக முதன்முறையாக தருமபுரி மாவட்டத்திற்க்கு இன்று வருகைபுரிந்தார்.


தருமபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், முன்னதாக மக்களை சந்தித்து பேசிய அவர்: மக்களின் அருளாசிகளோடு உயர்ந்த பதவியான இடைக்கால செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருபோதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அளிக்க முடியாது, இது வலிமையான இயக்கம், பலமான இயக்கம். 

திமுக அரசு அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடுகின்றன, வழக்கின் மூலமாக கட்சியை கெடுக்க நினைத்தால் திமுக கட்சி இல்லாமல் போய்விடும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் இருந்த சில துரோகிகள் திமுகவுடன் கைகோர்த்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.


தர்மபுரி மாவட்ட மக்கள் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒகேனக்கல் நீரேற்றும் திட்டதை நிரைவேற்ற அதிமுக ஆட்சியில் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை திமுக செயல்படுத்த முன்வரவில்லை. மின் கட்டணத்தை உயர்த்தி மக்களையும் விவசாயிகளையும் இந்த திமுக அரசு வஞ்சித்து வருவதாகவும், தனக்கு வருமானம், தன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்பது தான் முதல்வர் ஸ்டாலின் எண்ணம், அதே போல தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் இந்த ஆட்சியில் கிடைக்கிறது, ஆன்லைன் சூதாட்டத்தை கண்டிப்பாக தமிழகத்தில் ஒழிக்கவேண்டும் ஆனால் ஆன்-லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்தை விட்டுவிட்டு கருத்து கேட்பு கூட்டம் நடுத்துகிறார் ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டம் நடத்துவது குறித்து கருத்து கேட்பது என்பது இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies