தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி. கி.சாந்தி அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.
பின்னர் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார், மேலும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் சுமார் 56 பயனாளிகளுக்கு 1 கோடிய 81இலட்சத்து 42ஆயிரத்து 217 ரூபாய் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்கள்.
மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கொளரவிக்கப்பட்டனர், தொடர்ந்து பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. SP. வெங்கடேஸ்வரன், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி, மாவட்ட காவல் கண்கானிப்பாளர் கலைசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், அரசு அலுவலர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



