ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது இரண்டு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக செல்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதையின் பென்னாகரம் அருகேயுள்ள அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்த குருசாமி, பங்காரு அம்மாள் ஆகிய வயது முதிர்ந்த தம்பதியினர் இருவர் ஆற்றின் நடுவில் கோவில் கட்டி, கோவிலிலேயே தங்கி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வயது முதிர்ந்த இருவரும் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள கோவிலில் மாட்டிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு மீட்பு குழுவினர், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் கொட்டும் மழை என்று பாராமல் தம்பதியினரை துரிதமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு இருவரைும் பத்திரமாக மீட்கப்பட்னர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி நடைபெற்று, இருவரையும் மீட்க்கப்பட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

